காவல்துறையினரின் சோதனையில் இருந்து தப்பித்து அதிவேகமாக சென்ற கார் மோதி பாரிசின் 19வது வட்டத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்
பாந்தான் (Pantin) அருகே காவல்துறையினர் வாகன சோதனையின் ஈடுபட முயன்றபோது, நபர் ஒருவர் அதிவேகமாக காரை ஓட்டி அவர்களிடமிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
பாரிசின் 19 ஆவது வட்டத்திற்குள் சென்ற அந்த கார், சாலையில் நடந்து சென்றவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
உடனடியாக அங்கு விரைந்த அவசர மீட்பு பிரிவினர் காயமடைந்த நபருக்கு சிகிச்சை அளிக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரை ஓட்டி வந்த நபர் அருகில் இருந்த வீதி ஒன்றில் காரை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனையடுத்து, காரால் மோதி விட்டு தப்பி செல்லுதல் என்னும் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் தப்பியோடிய நபர் இன்று மதியம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்