பிரான்சு தமிழ் செய்திகள் வலைதளம் சமூக சார்ந்த, பக்கச்சார்பற்ற, சுதந்திர ஊடகம் என்பதோடு, சமூக நல நோக்கமுடைய, பாலின-சீரான செய்திக்குழுவால் நடத்தப்படுகிறது. பிரான்சின் ஊடகங்கள் பிரெஞ்சு மொழியில் மட்டுமல்லாது வேறு சில மொழிகளிலும் தங்கள் செய்தி சேவைகளை வழங்குகின்றன. இருப்பினும், பிரான்சில் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கென்றும், உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் தாய்மொழியான தமிழுக்கென்றும் ஒரு தமிழ் செய்தி ஊடகத்தை பிரான்சு நாட்டில் நிறுவுவது பெருங்கனவாக இருந்து வந்த நிலையில், அப்பெருங்கனவின் முதற்கட்டமாக பிரான்சிய தமிழர்களுக்கான செய்தி சேவையை தமிழில் வழங்கும் இத்தளத்தை உங்களுக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சியும் நிறைவும் கொள்கிறோம்.
பிரான்ஸ் தமிழ் செய்திகள் வலைதளம் பிரான்ஸ் செய்திகள் மட்டுமல்லாது, ஐரோப்பா, இந்தியா மற்றும் அகில உலக நிகழ்வுகளை விரைந்து தருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பல தரப்பட்ட ஊடகங்கள் மூலமாக உலக செய்திகளையும், பிரான்சில் நடைபெறும் முக்கிய செய்திகளையும், தமிழக - புதுவை செய்திகளையும் உண்மையாகவும், துல்லியமாகவும், விரைவாகவும் பிரான்ஸ் தமிழ் செய்திகள் செய்தித்தளம் உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் படிக்கும் எந்தவொரு செய்திக்குறிப்பும் முதன்மை செய்தி மூலங்களிலிருந்தும், ஊடக வட்டாரங்களிலிருந்தும் உண்மைத் தன்மை சரிபார்க்கப்பட்ட பின்னரே பதியப்பட்டவை.