பாரிசில் RATP நிறுவனத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பாரிசின் 14 வது வட்டத்தில் உள்ள Porte d’Orléans அருகே பணிமனைக்கு திரும்ப வந்து கொண்டிருந்த RATP பேருந்தில் திடீரென தீ பிடித்தது.
நல்வாய்ப்பாக பேருந்தில் யாரும் இல்லாததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
Dans la série des #bus qui prennent feu tout seul, cette fois-ci c'est un bus #RATP ligne 62, Porte d'Orléans hier soir dimanche 03/09.
— La Base RATP (@BaseRatp) September 4, 2023
Heureusement aucune victime n'est à déplorer, jusqu'au jour où.
La @RATPgroup doit réagir et remedier à ces problèmes graves et recurents ! pic.twitter.com/yUneseiaFG
இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
பேருந்து எதனால் தீ பிடித்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பேருந்து தீப்பிடித்து எரிவது இந்த ஆண்டில் இது மூன்றாவது சம்பவம் ஆகும்.