மூடப்படும் பெர்சி பேருந்து நிலையம்

by Editor
0 comment

ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு பெர்சி பேருந்து நிலையம் நிரந்தரமாக மூடப்படும் என்று பாரிஸ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரான்சில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

இதற்காக பல்வேறு பாதுகாப்பு முறைகள் துவங்கப்பட்டிருக்கின்றன.

தொலைதூரப் பேருந்துகள் நிற்கும் இடமாக மெர்சிப் பேருந்து நிலையம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், எதிர்காலத்தில் இவ்விடம் சீரமைக்கப்பட்டு, பேருந்துகள் இங்கு நிற்பது தவிர்க்கப்படும் என்றார்.

பாரிசில் உள்ள பெர்சி பேருந்து நிலையம் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு நிரந்தரமாக மூடப்படும் என்று பாரிஸ் நகர துணை மேயர் இம்மானுவேல் கிரகோர் ஊடகங்களிடம் நேற்று தெரிவித்துள்ளார்.

Flixbus, BlaBlacarஆகிய நிறுவனங்கள் தங்கள் பேருந்துகளை இங்கே நிறுத்தி பயன்படுத்தி வந்தன.

போக்குவரத்து நெருக்கடிகளை சமாளிப்பதற்காக 1996 ஆம் ஆண்டு பாரிசின் 12 வது வட்டத்தில் உருவாக்கப்பட்ட மெர்சி பேருந்து நிலையம் தொலைதூரப் பேருந்துகளும் சுற்றுலா பேருந்துகளும் நிற்கும் இடமாக செயல்பட்டு வந்தது. 

பாரிசின் புறநகர் பகுதிகளில் தொலைதூர பேருந்துகள் நிற்பதற்காக பெரிய இட வசதி கொண்ட பேருந்து நிறுத்தம் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech