பாரீசில் கத்திக்குத்து தாக்குதல் : ஒருவர் பலி

by Special Correspondent
0 comment

பிரான்சின் தலைநகர் பாரீசில் நபரொருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார், இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை ஒன்பது மணியளவில் பாரீசின் 15வது வட்டத்திலுள்ள Quai de Grenelle – Bir Hakeïm (16) பகுதிகளுக்கு அருகே நபரொருவர் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஈபிள் கோபுரத்திற்கு (Eiffle Tower) மிக அருகில் நடைபெற்ற இத்தாக்குதலில் ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணிகளில் ஒருவர் கத்திக்குத்து காயங்களினால் கொல்லப்பட்டுள்ளார்.

கணவர் கொல்லப்பட்ட நிலையில் அவரின் மனைவியை அருகிலிருந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர் தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளார்.

உடனே அங்கிருந்து தப்பித்து ஓடிய நபர் மேலும் இருவரை தாக்கியுள்ளார். இதில் இருவர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்த நிலையில் தன்னிடம் வெடிகுண்டுகள் இருப்பதாக கூறி அந்நபர் மிரட்டியுள்ளார்.

தப்பிச்செல்ல முயன்ற அவரை டேசர் மின்னதிர்வு மூலம் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

இதுகுறித்து தெரிவித்த உள்துறை அமைச்சர் ஜெரால்டு தர்மானின் ‘தாக்குதலாளியின் உயிருக்கு ஆபத்தில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்’ என்று கூறியுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலில் 24 வயது ஜெர்மானிய சுற்றுலா பயணி உயிரிழந்தார்.

சுத்தியால் தாக்கியதலில் அறுபது வயதுடைய ஒருவருக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 66 வயதான இன்னொரு ஆங்கிலேய பயணியும் காயமடைந்தார்.

முதற்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட அந்நபர் எசோனை (Essonne) சேர்ந்த 26 வயதான அர்மான்ட் (Armand Rajabpour-Miyandoab) என்பதும், ஏற்கனவே தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக 2016-ஆம் ஆண்டு உள்நாட்டு பாதுகாப்பு பிரிவால் கைது செய்யப்பட்டு ஐந்தாண்டுகள் சிறையில் இருந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

குற்றவாளி மனநிலை மற்றும்  நரம்பியல் பாதிப்புடையவர் என்றும், அதற்கான மருத்துவங்களை நிறுத்திவிட்டார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் குறித்து தேசிய தீவிரவாத ஒழிப்பு பிரிவு அலுவலகம் அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக என்னும் கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இத்தாக்குதல் குறித்து வலதுசாரி அமைப்பை சார்ந்தவர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech