Paris Job Fair : இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

by Editor
0 comment

இளைஞர்களுக்காக நடத்தப்படும் பதினோராவது வேலைவாய்ப்பு முகாம் நாளை (10/02/2023) வெள்ளிக்கிழமை பாரிசிலுள்ள Grande Halle de la Villette-வில் நடைபெறவுள்ளது.

“Paris pour l’emploi des jeunes” என்று அழைக்கப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம் இளைஞர்களை, குறிப்பாக 30 வயதிற்கு குறைவானவர்களை, முன் அனுபவம் உள்ளவர்கள், இல்லாதவர்கள், அடிப்படை கல்வி கற்றவர்கள் முதல் முதுகலை படித்தவர்கள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்குவதற்காக நடத்தப்படுகின்றது.

பாரிசில் நடைபெறவுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். முழு நேர நிரந்தர பணிகள் மட்டுமல்லாது படித்துக்கொண்டே பணிபுரியும் வாய்ப்புகள், தற்காலிக வேலை வாய்ப்புகள் என பல தரப்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன.

இந்த ஆண்டு வேலைவாய்ப்புகள் மிகவும் இறுக்கமாக உள்ளன. பல்வேறு துறை நிறுவனங்களும் புது ஊழியர்களை தேர்ந்தெடுக்க உள்ளன. குறிப்பாக இந்த துறைகளில்: கேட்டரிங், வங்கி / காப்பீடு, கட்டுமானம், தொழில், போக்குவரத்து, மருந்தகம் மற்றும் வேதியியல் …

இந்த ஆண்டு முதன்முறையாக Randstad நிறுவனம் இதில் பங்கேற்கிறது. அதோடு 300 பேருக்கு மேல் பணியில் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வேலை மட்டுமல்லாது இன்டர்ன்ஷிப்களுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

installation/maintenance
digital
logistic transport
social work/human services
business support (reception/purchasing/management/hr/secretarial)
defence/security
industry

நடைபெறும் இடம் :

“Paris pour l’emploi des jeunes”
211, avenue Jean-Jaurès,
Paris 19

Friday, February 10, from 10 a.m. to 5 p.m., at the Grande Halle de la Villette

Metro 5 : Porte de Pantin

அனுமதி இலவசம்

மேலும் தகவல்களுக்கு :

https://www.paris.fr/pages/plus-de-250-employeurs-au-salon-paris-pour-l-emploi-des-jeunes-22972

https://oui-emploi.fr/fr

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech