பிரான்சில் நடைபெறும் அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில் பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு சீசர் விருது வழங்கப்படுகிறது.
பிப்ரவரி 23-ம் தேதி அன்று பிரான்சில் நடைபெறவுள்ள அகாடமி விருது வழங்கும் விழாவில், அமெரிக்க – பிரிட்டிஷ் இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனுக்கு ஆஸ்கார் விருதுக்கு சமமான பிரான்சின் கௌரவ சீசர் விருது வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு விருது பெற்ற டேவிட் பிஞ்சேர்யை தொடர்ந்து இந்த ஆண்டு கௌரவ சீசர் விருது பெறுகிறார் 53 வயதான நோலன்.
இதுவரை இந்த கௌரவ விருதுகளை பெற்றவர்கள் Cate Blanchett, Robert Redford, George Clooney and Michael Douglas ஆகியோராவர்.
நோலனின் முதல் திரைப்படமான 1998 ஆண்டு வெளியிடப்பட்ட ஃபாலோயிங்கில் இருந்து ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீடும் “ஒரு முக்கிய நிகழ்வாக” இருந்ததாக அகாடமி ஆஃப் தி சீசர்ஸ் குறிப்பிட்டுள்ளது. நோலன் “திரையரங்கத் திரைப்பட அனுபவத்தின் மீது அசைக்க முடியாத ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டவர், தொடர்ந்து சினிமா கதைசொல்லலின் வரம்புகளைத் தகர்க்கிறார்” என்றும் கூறியுள்ளது.
இவரது டார்க் நைட் trilogy, இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லர் மற்றும் டன்கிர்க் (Dunkirk) போன்ற பெரும்பாலான படங்கள் பல விருதுகளை வென்றுள்ளன. ஆனாலும் இன்று வரை கிறிஸ்டோபர் நோலனுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை. இந்த நிலை வருகின்ற மார்ச் மாதம் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெமண்டோ (2002) – சிறந்த திரைக்கதை,
இன்செப்ஷன் (2011) – சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த திரைப்படம்,
டன்கிர்க் (2018) – சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் பல முறை பரிந்துரைக்கப்பட்டாலும், அண்மையில் அவர் இயக்கிய ஒபன்ஹைமர் (Oppenheimer) திரைப்படம் அகதமி விருதுகள் எனப்படும் ஆஸ்கர் விருதுகளுக்காக 2024 ஆம் ஆண்டில் அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, விருதுகளை வெல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவர் இயக்கிய Oppenheimer திரைப்படம் ஏற்கனவே சிறந்த திரைப்படம் மற்றும் திறந்த இயக்குனர் உட்பட ஐந்து கோல்டன் குளோப் விருதுகளை பெற்றுள்ளது.
இத்திரைப்படம் உலகளவில் $955 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இது 2023 ஆம் ஆண்டின் மூன்றாவது அதிக வசூல் செய்த படமாகவும், இரண்டாம் உலகப் போர் தொடர்பான படங்களில் அதிக வசூல் செய்த படமாகவும், அதிக வசூல் செய்த வாழ்க்கை வரலாற்று படமாகவும், அதிக வசூல் செய்த R- மதிப்பிடப்பட்ட இரண்டாவது படமாகவும் மாறியது.
மேலும், சிறந்த திரைப்படம் உட்பட 13 பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகளுக்காக அண்மையில் பரிந்துரைக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டின் சிறந்த முதல் பத்து படங்களில் ஒன்றாக தேசிய திரைப்பட ஆய்வு குழு மற்றும் அமெரிக்கன் திரைப்பட கல்லூரியாலும் அறிவிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டில் பிரான்ஸ் திரைப்படங்களை கௌரவிக்க இது சரியான ஆண்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
49-வது சீசர் விருதுகள் வழங்கும் விழா வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி ஒலிம்பியா கான்செர்ட் ஹாலில் நடைபெறுகிறது.