அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து ஜோடி சடலமாக மீட்பு!

by Editor
0 comment

பாரிசின் 18-ஆம் வட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் படுக்கையறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

பாரிசின் 18 ஆவது வட்டத்தில் உள்ள rue de torcy வீதியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றிலிருந்து ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் ஒன்றாக  மீட்கப்பட்டுள்ளன.

37 வயதான பெண்ணும் அவருடைய இணையரான 52 வயது ஆணும் அந்த வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட தொடர் சிக்கல்கள் மற்றும்  மனக்கசப்பின் காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த வீட்டின் படுக்கை அறையில் பெண்ணும் அவருடைய இணையரும் உயிரற்ற நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

பெண்ணின் உடலில் கிட்டத்தட்ட 20 கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆணின் உடலில் இதயத்தின் அருகே ஒரே ஒரு கத்துக் கொடுத்த காயம் காணப்பட்டது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதும், கொன்றவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

பெண்ணை கொன்றுவிட்டு அவருடைய இணையரான அந்த நபர் தன்னைத் தானே குத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல் துறையினர் கருதுகின்றனர்.

ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தாலும், அவருடைய மகள் நீண்ட நாட்களாக தன்னை வந்து பார்க்காததால் கவலையடைந்த அப்பெண்ணின் தாயார் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மாற்று சாவியின் மூலம் கதவை திறக்க முயன்றபோது, கதவை திறக்க முடியாமல் உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததும், அவருடைய அலைபேசி உள்ளே ஒலி எழுப்பியதும் அவருக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து விடியற்காலை 3 மணியளவில் அவர் தீயணைப்பு வீரர்களை அழைத்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பக்கத்து வீட்டின்  பால்கனி வழியாக அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண்ணும் அவருடைய நேரம் உயிரற்ற நிலையில் அருகருகே கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களுக்கு அருகே ரத்தக்கறை படிந்த கத்தியும் கண்டெடுக்கப்பட்டது.

அந்தப் பெண்ணின் இணையர் வேறொரு பெண்ணை தாக்கியதாக ஏற்கனவே குடும்ப வன்முறை குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 2021 ஆம் ஆண்டு இரண்டு மாதங்கள் சிறையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. 

கடந்த ஐந்து வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும், அண்மையில் பிரிந்து வாழலாம் என்று முடிவெடுத்து அதற்கான முயற்சிகளில் இறங்கியதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிலிருந்து ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் கைப்பற்றப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள எங்கள் வாட்சப் மற்றும் டெலிகிராம் சேனல்களில் இணைந்திடுங்கள்.

Whatsapp Channel : JOIN

Telegram Channel : JOIN

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech