217
பிரான்சின் தென்மேற்கு கடற்கரைப் பகுதியில் பறவைத் தீவு உள்ளது.
பிரான்சின் தென்மேற்கு கடற்கரைப் பகுதியில் இருக்கும் பறவைத் தீவு, அலைகளின் ஆர்ப்பரிப்போ, அதிக ஆழமோ இல்லாத கடல் பிரதேசம். அதனால் இங்கு கடல் நீருக்கு மத்தியில் அழகிய பங்களாக்கள் கட்டி ஓட்டல் ஆக்கியிருக்கிறார்கள். கடல் தண்ணீருக்கு நடுவே படகில் சென்று தங்கும் இனிய அனுபவத்துக்காக நிறைய பேர் இந்த பங்களாக்களுக்கு வருகிறார்கள். எனினும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சியாக புதிய பங்களாக்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறது அரசு.
தகவல் : தினத்தந்தி