பாரிஸ் : டாக்சி மோதி சிறுமி பலி

by Editor
0 comment

பிரான்சின் முக்கிய இடங்களுள் ஒன்றான சாம்ப்ஸ் எலிசே அருகே சாலையொன்றில் கார் மோதி ஏழு வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார்.

நேற்று முன்தினம், பாரிசிலுள்ள சாம்ப்ஸ் எலிசே அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உக்ரைனிலிருந்து சுற்றுப்பயணம் வந்திருந்த அந்த குடும்பத்தினர் காலை பதினொரு மணியளவில் சாம்ப்ஸ் எலிசே அருகேயுள்ள சாலையை கடக்க முயன்றனர்.

சாலையை கடக்கும் வழியில் அவர்கள் சென்றுக்கொண்டிருக்கும்போது திடீரென போக்குவரத்து பச்சை விளக்கு ஒளிர்ந்ததால், சிறுமியை கவனிக்காத டாக்சி ஓட்டுநர் உடனடியாக காரை இயக்கியதாலேயே இந்த விபத்து நடைபெற்றதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு வந்த அவசர மருத்துவ சேவை பிரிவினர் சிறுமியை சோதித்துவிட்டு அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து டாக்சியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech