TGV ஏறியதில் பூனை மரணம் : SNCF நிறுவனத்திற்கு ஆயிரம் யூரோ அபராதம்

by Editor
0 comment

பிரான்சின் அதிவேக ரயிலான TGV ஏறியதில் பூனை இறந்த சம்பவத்தில் இரயில்வே நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேகோ எனும் பூனையின் மரணம் சமூக ஊடகத்திலும், மக்கள் நடுவிலும் கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது. இரயில்வே நிறுவனத்தின் அலட்சியத்தாலேயே பூனை கொல்லப்பட்டதாக பயணிகள் குற்றஞ்சாட்டினர்.

neko dr1687170370375 format16by9
Provided by France Tamil News

இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி, பிரான்சின் மோன்பர்னாஸ் ரயில் நிலையத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இரயில் கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நேகோ எனும் வளர்ப்பு பூனை உரிமையாளர்களிடமிருந்து தப்பித்து தொடர் வண்டிக்கு அடியில் சென்று பதுங்கிக்கொண்டது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பூனையின் உரிமையாளர்கள் ரயில்வே ஊழியர்களிடம் பூனையை மீட்டுத்தருமாறும், இரயிலை இயக்க வேண்டாமென்றும் கோரியுள்ளனர்.

பூனையை பிடிப்பதற்காக கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் மேல் காத்திருந்த TGV தொடர் வண்டி, உரிமையாளர்களின் தொடர் வேண்டுகோளை புறக்கணித்துவிட்டு கிளம்பியதாக கூறப்படுகிறது. அப்போது தொடர் வண்டியில் சிக்கி அந்த பூனை உயிரிழந்தது.

இந்த சம்பவம் விலங்கு நல ஆர்வலர்கள், சமூக ஊடகங்கள் நடுவே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, SNCF நிறுவனத்தை இவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு அதன் வழக்குரைஞர்கள் முறையிட்டனர்.

பூனையின் உரிமையாளர்கள் சார்பாக வாதாடிய வழக்குரைஞர் ‘பைகள், பெட்டிகளுக்காக தொடர் வண்டியை நிறுத்தலாம், பூனைக்காக அல்ல’ என்று தொடர் வண்டி ஊழியர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டனர்.

வழக்கை விசாரித்த பாரிஸ் நீதிமன்றம் ‘பூனையை மீட்க போதுமான அளவு உதவிகளில் அக்கறை செலுத்தவில்லை’ என்று குறிப்பிட்டு, ‘SNCF ஊழியர்களின் அலட்சியத்தினாலேயே பூனை இறந்ததாக’ குறிப்பிட்டு அதற்கு தண்டனையாக 1000 யூரோக்கள் அபராதம் விதித்தது. மேலும், அபராதத் தொகையை பூனையின் உரிமையாளர்களிடம் வழங்கவும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை விலங்கு நல ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech