10 மில்லியன் யூரோக்கள் (சுமார் ₹90 கோடி) மதிப்புள்ள ஆடம்பர நகைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், சுமார் €10 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 90 கோடி ரூபாய்) மதிப்பிலான பிரம்மாண்டமான நகைகளை உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த இருவர், பாரீசில் உள்ள Gare de Lyon ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருடப்பட்ட நகைகள், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
பிரான்சின் லியோன் (Lyon) நகரத்திலிருந்து பாரிசுக்கு வந்துக்கொண்டிருந்த அதிவேக TGV ரயிலில் காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான சிலரை பிடித்து சோதனையிட்டபோது அவர்களில் ஒருவர் சாக்கில் நகைகளை ஒளித்து தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், ரோலக்ஸ் (Rolex) கடிகாரம், €5 மில்லியன் மதிப்புள்ள சங்கிலி, €2 மில்லியன் மதிப்புள்ள காதணிகள், மற்றும் €1 மில்லியன் மதிப்புள்ள மோதிரம் ஆகியவை இருந்துள்ளன.
மேலும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் துனிசியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. சந்தேக நபர்களில் ஒருவர் சிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 30, 2025) அன்று நடைபெற்ற இச்சம்பவத்தில், அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக, அவர்களின் வைத்திருந்த பொருட்களில் இரும்பை அறுக்க பயன்படும் ஆங்கில் கிரைண்டர் (angle grinder) எனப்படும் கருவி இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
சட்டவிரோதமாகச் செயல்படும் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைப் பதுக்கியதாகக் குற்றம் சாட்டி, இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இது போன்ற விலையுயர்ந்த நகைகள் எப்படி அவர்களிடம் வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சட்டத்துறை இந்த வழக்கை குற்றம் மற்றும் கொள்ளை தடுப்பு பிரிவிற்கு (BRB) மாற்றியுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் ஏற்கனவே போலீசாரால் குற்றப் பின்னணி கொண்டவர்களாக அறியப்பட்டவர்கள் என ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் துணிகரச் சம்பவம், லியான் நகரில் நடந்த ஒரு முக்கிய கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிப்பதாகத் தெரிகிறது.
இவ்வளவு விலையுயர்ந்த நகைகள் எப்படி அவர்களிடம் வந்தது, இவை திருடப்பட்டவையா அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயலுடன் தொடர்புடையதா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம், பிரான்சில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இச்சம்பவம், சர்வதேச அளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.