Monday, May 18, 2026

சேன் ஆற்றில் படகுகள் மோதல் – 16 பேர் காயம்

by Editor
0 comments

நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் சென்றுக்கொண்டிருந்த படகுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் பதினாறு பேர் காயமடைந்துள்ளனர்.

பாரிசின் சேன் (Seine) ஆற்றில் ஏராளமான நீளமான படகுகளில் மிதக்கும் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

பாரிசின்15 வது வட்டத்தில், புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அருகே இரண்டு மிதக்கும் உணவகங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.

இரண்டிலும் கிட்டத்தட்ட நூறு பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

உடைந்த தட்டுகள், பாத்திரங்கள் பயணிகள் மேல் விழுந்ததில் பலர் காயமடைந்தனர்.

இரண்டு படகுகளிலும் 16 பேர் காயமடைந்தனர். அவர்களில் 9 பேர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

‘இவ்விபத்தினால் சேன் ஆற்றில் எண்ணெய் மாசு ஏதும் நடைபெறவில்லை’ என பாரிசின் 15வது வட்டத்தின் நகர மன்ற தலைவர் பிலிப் தெரிவித்துள்ளார்.

படகு விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

You may also like

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2026. All Rights reserved. Powered by NakshatraTech