வாகன சோதனையில் கூழாங்கற்களுடன் கைதான பிரான்ஸ் நாட்டுக்காரர்

by Editor
0 comment

சுங்கத்துறையினரின் வாகன சோதனையில் 41 கிலோ கூழாங்கற்களை கடத்தி வந்ததாக பிரான்சை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியில் சர்தானியன் (Sardinia) காவல்துறையினர் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் தீவுகளுக்கு கோடை கால விடுமுறைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளை தீவிரமாக கண்காணிப்பது வழக்கம்.

ஏனெனில் தீவுகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் நினைவிற்காக தீவிலிருக்கும் மணல் மற்றும் கற்களை ஜாடிகளில் வைத்து கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.

வழக்கம்போல சோதனையில் ஈடுபட்டிருந்த இத்தாலிய சுங்கத்துறை அதிகாரிகள், காரில் வைக்கப்பட்டிருந்த 41 கிலோ கூழாங்கற்களையும் கற்களையும் கைப்பற்றி உள்ளனர்.

தீவின் கடற்கரையிலிருந்து திருட்டுத்தனமாக இவற்றை அள்ளிச்சென்ற பிரெஞ்சு சுற்றுலா பயணியை கைது செய்துள்ளனர்.

தீவின் வடமேற்கு பகுதியில் உள்ள Porto Torres எனும் பகுதியில் இருந்து பிரான்சின் நீஸ் நகருக்கு செல்லும் படகில் ஏற முயன்ற பயணியின் காரை சோதித்த போது காரின் பின்பகுதியில் சட்ட விரோதமாக பதுக்கப்பட்டு இருந்த 41 கிலோ கூழாங்கற்களும், கற்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று இத்தாலிய சுங்கத்துறையின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இத்தாலியின் சர்தினியா (Sardinia) தீவு அதனுடைய வெண்மை கடற்கரை மணல்களுக்கு பெயர் போனது.

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் விடுமுறைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அந்த மணல்களை கண்ணாடி குடுவைகளில் வைத்து தங்களுடைய நினைவுக்காக கொண்டு செல்கின்றனர்.

இப்படி ஆண்டுதோறும் தன் கணக்கான மணல்கள் சுற்றுலா பயணிகளால் கொண்டு செல்லப்படுகின்றன.

அதோடு சர்தினிலிருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்படும் இந்த மணல்களுக்கு சந்தையிலும் நல்ல மதிப்பு உள்ளது என்கின்றனர் காவல்துறையினர்.

சட்டவிரோதமாக இந்த மணல் சுரண்டலை தடுப்பதற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு புதிதாக சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதன்படி சட்ட விரோதமாக மணல்களை கொண்டு செல்பவர்களுக்கு 500 முதல் 3000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பெரிய பிளாஸ்டிக் போத்தல்களில் வைத்து 40 கிலோ மணலை காரில் மறைத்து வைத்து அள்ளிச்சென்ற பிரெஞ்சு சுற்றுலா பயணிகள் இருவரை இத்தாலிய போலீசார் அதிரடியாக கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech