3 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகை!

by Special Correspondent
0 comment

ஆன்மீக பயணமாக இன்று (19.01.2024) மாலை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வர உள்ளார். மேலும், பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னையில் தொடங்கவுள்ள  ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டியை துவங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர். என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அதன் பிறகு இன்று இரவு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இன்று இரவு ராஜ் பவனில் தங்குகிறார்.

மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும்  குற்றப்பிரிவு, ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உட்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 22,000 போலீசார் ஐந்தடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை (20.01.2024) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கு இருந்து காலை 11 மணி அளவில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்பு திருச்சி விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்கிறார் அங்கு இருந்து தனி விமானம் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். பிற்பகல் ராமேஸ்வரம் கடலில் புனித நீராடிவிட்டு ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். நாளை இரவு ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தில் தங்குகிறார்.

நாளை மறுநாள் (21.01.2024) ராமேஸ்வரம் அக்னி  தீர்த்த கடலில் நீராடுகிறார். பின்னர் சாலை மார்க்கமாக தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனைக்கு செல்கிறார். அங்கு காலை 10.30 மணி அளவில் கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதன்பிறகு ராமர் பாலம் இருக்கும் இடத்தை பார்வையிடுகிறார். அங்கு இருந்து புனித நீரை எடுத்துக்கொண்டு மதுரைக்கு செல்கிறார். மதுரையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு பயணம் செய்கிறார். அடுத்த நாள் (22.01.2024) டெல்லியில் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று ராமர் சிலை பிரதிஷ்டையில் கலந்து கொள்கிறார்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech