பாரிஸ் மேயர் மீது ஊழல் குற்றச்சாட்டு!

by Special Correspondent
0 comment

அரசு நிதியை மோசடி செய்ததாக பாரிஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ மீது ஊழல் தடுப்பு சமூக அமைப்பொன்று ஊழல் புகார் அளித்துள்ளது

பாரிஸ் நகர மேயராக இருப்பவர் ஆன் ஹிடால்கோ.

வருகின்ற 2024 ஆம் ஆண்டு பிரான்சில் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுவதை ஒட்டி, அதற்கான ஏற்பாடுகளை பார்ப்பதற்காக பிரான்சின் கடல் கடந்த பகுதிகளான பிரெஞ்சு பாலினேசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அரசு நிதியில் பாரிஸ் நகர மேயர் தனிப்பட்ட பயணங்களை மேற்கொள்கிறார் என்று ஊழல் தடுப்பு சமூக அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அரசு பணிகளுக்காக பயணம் செய்தால் அதற்கான செலவினை நகர நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். ஒருவேளை தனிப்பட்ட பயணம் என்றால், அதை அவர் தன்னுடைய சொந்த செலவில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆண் ஹிடால்கோ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தகிதி (Tahiti= அருகில் உள்ள தீவில் வசிக்கும் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக அரசு செலவில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

அதோடு இந்த பயணத்தில் ஆன் ஹிடால்கோவுடன் அவருடைய உதவியாளர்களும் கணவரும் சென்றுள்ளனர் என்று அந்த அமைப்பு அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளது.

இந்த பயணங்களுக்கு யார் செலவு செய்தது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

பாலினேசியாவில் நடைபெற்ற பல முக்கிய சந்திப்புகளுக்கு அவர் சென்று இருக்கலாம் ஆனால் அவர் முற்றிலுமாக தொடர்பில் இல்லை.

ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடமான தகிதிக்கு அவருடைய விளையாட்டு துறை உதவியாளரான பியர் மட்டுமே சென்று பார்வையிட்டுள்ளார்.

இதை  பாரிஸ் நகர நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இது அரசு முறை பயணம் தான் என்றும், பாரிஸ் நகர மேயரின் தனிப்பட்ட பயணங்களுக்கு பாரிஸ் நிர்வாகம் நிதி அளிக்கவில்லை என்றும், அதனால் நிதி இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் நகர நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது. 

கடந்த மாதம் அக்டோபர் 25ஆம் தேதி பயணம் செய்த அவர் நவம்பர் ஆறாம் தேதி பிரான்சுக்கு திரும்பினார்.

இதற்கான மொத்த பயண செலவு சுமார் 41 ஆயிரம் யூரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்குமிடம் உணவுகளுக்கு மட்டும் 18545 யூரோக்கள் செலவானதாக கூறப்பட்டுள்ளது.

பாரிஸ் நகர நீதிமன்றம் இந்த ஊழல் புகார் வழக்கினை நிச்சயம் விசாரிக்கும் என்று தாங்கள் நம்புவதாக அந்த அமைப்பின் தலைவர் மர்செல் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech