Thursday, December 11, 2025

பிரான்சில் மே 18 நினைவேந்தல் !

by Special Correspondent
0 comments

கடந்த 2009ஆம் ஆண்டு, இலங்கையில் நடந்த இறுதி போரின்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்ததை நினைவு கூறும் விதமாக பிரான்சில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.

இலங்கையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.

இலங்கையில் நடந்த இறுதி போரின்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்தனர். மேலும், ஒரே நாளில் பலர் கூட்டமாக கொல்லப்பட்டனர்.

இந்த நாளை நினைவுக்கூறும் விதமாக, உலகம் முழுவதும் தமிழ் மக்களும் மனித உரிமை ஆதரவு அமைப்புகளும் ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தி, போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுக்கூர்வதோடு, நீதிக்கான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

மறக்க முடியாத இந்த துயர நாளில், தமிழர்களின் நீதி தேடல் பதினாறு ஆண்டுகள் கழித்தும் இன்றும் தொடர்கிறது.

தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரான்சில் இன்று அனுசரிக்கப்பட்டது.

பாரிஸ் நகரில் Place de la Republique பகுதியில் தொடங்கிய கவனயீர்ப்புப் பேரணி, Place de la Bastille பகுதியில் நிறைவடைந்தது.

பேரணிக்கு பின் place de bastille பகுதியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் முன்பாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச் சுடரை முள்ளிவாய்க்கால் மண்ணில் உறவுகளை இழந்த குடும்ப உறுப்பினர் ஒருவர் ஏற்றினார். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.

மேலும் இந்நிகழ்வில் Stephen Hervé – Maire de Bondy et conseiller régional d’Île-de-France, XIsabelle Delacourt – Adjointe au maire de Savigny-le-Temple, Gokhan Unver – Collaborateurs d’Aly Dioura Député de la Seine-Saint-Denis, Carlos Martens Bilongo – Député du Val-d’Oise, Amina Bacar – Conseillère municipale à Avon (Seine-et-Marne) et présidente du Rayonnement Républicain, Gilles Poux – Maire de La Courneuve (Parti Communiste Français – PCF), Marie-George Buffet – Ancienne ministre de la Jeunesse et des Sports, anćienne députée de Seine-Saint-Denis (Parti Communiste Français – PCF), Soumya Bourouaha – Députée de Seine-Saint-Denis (Parti Communiste Français – PCF), M. Ba Elhadj Adjointe au maire Noisy le Sec, நாடுகடந்த தமிழீழ அரசு (TGTE) Sivasubramaniam Mahinthan போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டு உரையாற்றினர்.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், பிரான்சின் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் குர்திஸ்தான் மக்களும் கலந்து கொண்டனர்.

தமிழர் கலை பண்பாட்டுக் கழக கலைஞர்கள் மற்றும் தமிழ்ச்சோலை மாணவர்கள் இலங்கை இராணுவ அடக்குமுறை, முள்ளிவாய்க்கால் பேரவலம், மற்றும் இலங்கையின் சமகால அரசியல் குறித்து ஊர்திப் பவனியில் காட்சிப்படுத்தினர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வு, தமிழர்களின் நீதி தேடல், அழிக்கப்பட்ட உறவுகளின் நினைவு, நீங்கா துயரத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech