இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பெண் விஞ்ஞானியான லலிதாம்பிகாவிற்கு பிரான்சின் உயரிய விருதான லெஜியோன் தி ஹானர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த பெண் விஞ்ஞானியான லலிதாம்பிக்கைக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான Legion d’Honneur (the Legion of Honour) விருது இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதரால் இன்று வழங்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் சார்பாக இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் தியரி மத்தூ () அவரிடம் விருதினை வழங்கினார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் திட்ட தலைவராக பதவி வகித்தவர் திருமதி லலிதாம்பிகா.
இஸ்ரோவின் அதி நவீன ராக்கெட் தொழில்நுட்பத்தில் வல்லுனரான லலிதாம்பிகா, இஸ்ரோவின் திட்டப் பணிகளில் பங்கேற்றுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் திட்டப் பணி இயக்குனராக பிரான்சின் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து பணியாற்றினார்.
அதோடு 2021 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான விண்வெளி ஆய்வுகள் மேம்பட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட ஒருங்கிணைத்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பிரான்சுடன் இணைந்து பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் விண்வெளிக்கு தேவையான பயிற்சிகளை பெற முடியும்.
பிரான்ஸ் ஆட்சி செய்த பேரரசரான நெப்போலியன் போனபார்ட் 182 ஆம் ஆண்டு இந்த விருதினை உருவாக்கினார்.
பிரான்சின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘லேஜியோன் தி ஆனர்’, பிரான்ஸ் நாட்டின் நலனுக்காக சிறப்பாக செயல்படும் நபர்களுக்கு, (அவர்கள் எந்த நாட்டவராக இருப்பினும்) வழங்கப்படும் உயரிய விருதாகும்.