போர்க் குற்றங்களின் காரணமாக பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய நாட்டுக்கொடி இடம் பெறாது என்று பிரான்சு அதிபர் மதெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற சந்திப்பில் ரஷ்ய தடகள வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ இது ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு முடிவெடுப்பதல்ல மாறாக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தான் தீர்மானிக்க வேண்டும்’ என்று கூறினார்.
உக்ரேன் மீதான ரஷ்ய போர் துவங்கியதிலிருந்து, ரஷ்யா மற்றும் பெலாரசை சேர்ந்த தடகள வீரர்கள் பல்வேறு தடைகளை சந்தித்து வருகின்றனர்.
தொடர்ந்து போர் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், ஒலிம்பிக் கமிட்டி ரஷ்யா மற்றும் பெலாரசின் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதித்துள்ளது.
‘பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவின் தேசிய கொடி இடம்பெறாது’ என்று பிரெஞ்ச் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.