போராட்டம் செய்தவர்களில் இருவர் மீது முறையின்றி ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுட்ட காவலர் நீதிமன்றத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 2020 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற மஞ்சள் ஆடை போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது முறையின்றி ரப்பர் குண்டு துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டுள்ளனர்.
இது தொடர்பான காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், காவல்துறையினரின் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஒருவர் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்தார்.
இரு வேறு காணொளிகள் வெளியாகி அதில் காவல் துறையினர் முறைகேடாக துப்பாக்கிச் சூடு நடத்தியது உறுதிப்படுத்தப்பட்டது.
இது தொடர்பான விசாரணை கடந்த 2020 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூடு தேவையற்றது என்றும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக காவலர் லுதோவிக் என்பவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
வரும் நாட்களில் காவல்துறையினர் மீதான நீதித்துறையின் இத்தகைய கடும் நடவடிக்கைகள் இன்னும் அதிகரிக்கும் என்று பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.