காவல்துறை வாகனத்தில் மோதி பதின் வயது சிறுவன் பலி

by Editor
0 comment

இருசக்கர வாகனம் காவல்துறை வாகனத்தின் மீது மோதியதில் பதின் வயது சிறுவர் ஒருவர் இறந்தது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

Élancourt (Yuevelines) நகரில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 16 வயது சிறுவன் ஒருவரை காவல் துறையினர்  தடுத்து, நிற்குமாறு கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கு உடன்படாத சிறுவன் வாகனத்தை தொடர்ந்து ஓட்டிச் சென்றுள்ளார்.

அவரை காவல்துறை வாகனம் பின்தொடர்ந்துள்ளது.

வேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் ஒரு முச்சந்தியில் இன்னொரு காவல் துறை வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அந்த சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வேகமாக வரைந்த அவசர சேவை பிரிவினர் மாரடைப்பு ஏற்பட்ட சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இரண்டு காவல்துறை வாகனங்களின் ஓட்டுனர்களும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனர்.

உள்நோக்கமின்றி காயம் ஏற்படுத்துதல் மற்றும் வாகனத்தை மோதி உயிரிழக்க செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், காவல்துறையினரின் அறிவிப்பினை ஏற்காத அந்த சிறுவன் தொடர்ந்து வண்டியை ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.

சிறுவன் இறந்த தகவலைக் கேட்டு சுமார் 25 ஆயிரம் பேர் கூடி உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க ஏராளமான ஆயுதப்படை காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் நாந்தேர் (nanterre) நகரில் நகேல் எனும் இளைஞர் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட தான் நாடு முழுவதும் மிகப்பெரும் கலவரம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech