பள்ளியில் துன்புறுத்தல்களுக்கு ஆளான மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
புவாசி (Poissy) அருகே பதினைந்து வயது மாணவர் ஒருவர் நேற்று (செவ்வாய்கிழமை) தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
மாணவரின் உடலை கண்ட அவருடைய தாய் உடனடியாக அவசர மீட்பு பிரிவினருக்கு தகவல் அளித்தார்.
உடனடியாக அங்கு விரைந்த அவசர மீட்பு பிரிவினர் அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தேசிய பள்ளி கல்வி அமைச்சகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
‘முதற்கட்ட விசாரணையில் இறந்த மாணவர் ஏற்கனவே 2022-23 கல்வியாண்டில் பள்ளியில் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர் என்பது தெரிய வந்துள்ளது.மாணவர் இறப்பு குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என கல்வி அமைச்சர் காப்ரியேல் தெரிவித்துள்ளார்.