பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த காவலர் மீது அடையாளம் தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
Triel-sur-Seine (Yvelines) அருகே இரவு 12:40 மணியளவில் முகமூடியணிந்த நான்கைந்து நபர்கள் காவலரை முகத்தில் குத்தியுள்ளனர். அதன் பிறகு அவருடைய கார் சாவியை பிடுங்கி திருடிச்சென்றுள்ளனர்.
அந்த காரில் அவருடைய அலுவல் துப்பாக்கியும் இருந்துள்ளது. அதோடு அக்கும்பல் காவலரின் கைபேசியையும் பிடுங்கி சென்றது.
காவல்துறையின் தேடுதல் வேட்டையில் காணாமல் போன பெஷோ 208 கார் Chanteloup-les-Vignes எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடைய கைபேசியும் வேறொரு இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அவருடைய துப்பாக்கி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்மையில் சேன் எ மார்ன் பகுதியில் காவலர் ஒருவரை வீட்டில் வைத்து தாக்கு கும்பல் அவருடைய காரை எரித்துவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.