163
பிரபல சரக்கு பரிமாற்ற நிறுவனமான டி.எச்.எல் (DHL) கிடங்கிலிருந்து 800 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பிரான்சின் லியோ அருகேயுள்ள் வெனிசியோ (Vénissieux (Rhône) எனும் ஊரிலுள்ள டி.எச்.எல். சரக்கு கிடங்கில் சில பொதிகளிலிருந்து கடுமையான மணம் வரவே அதை அந்நிறுவன ஊழியர்கள் சோதித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் கஞ்சா போதைப்பொருள் இருந்த பெரும்பொதிகளை கைப்பற்றினர்.
இது குறித்து எவரும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.