சரக்கு லாரி மீது கார் மோதியதில் மூவர் பலி

by Editor
0 comment

சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் இறுதி ஊர்வலத்திற்கு சென்று விட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்த மூவர் பலியாகியுள்ளனர்.

காரை ஓட்டி வந்தவர் உட்பட இறந்தவர்கள் அனைவரும் 70 வயதை கடந்தவர்கள். அனைவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். காரிலிருந்த நாயும் விபத்தில் பலியாகியுள்ளது. இவர்கள் Poitiers எனும் ஊரினை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

சரக்கு லாரி ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை. இருப்பினும், கடும் அதிர்ச்சியில் பாதிப்படைந்த அவரை அவசர பிரிவினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

147 தேசிய நெடுஞ்சாலையில் Val-d’Oire-et-Gartempe எனும் ஊரின் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

வாகனங்களை முந்துவது தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை முந்த முயன்றபோது சரக்கு லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech