இத்தாலி : முதியோர் இல்லத்தில் தீ விபத்து – ஆறு பேர் பலி

by Editor
0 comment

இத்தாலியின் மிலான் நகரின் ஒரு முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு முதியவர்கள் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

நேற்று அதிகாலை 1:30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ முதியோர் இல்லம் முழுக்க பரவியது.

உடனடியாக அங்கு விரைந்த அவசர சேவை பிரிவினரும், தீயணைப்பு பிரிவினரும் தீயில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர், 81 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‘மின்சார கோளாறால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறோம்’ என்று தீயணைப்பு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து அந்த கட்டிடத்தில் இருந்த பலரை வேறு இடத்துக்கு மாற்ற மிலன் நகர நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech