ஐந்து மற்றும் பத்து வயது குழந்தைகள் இறந்த நிலையில் ஒரு வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளனர். தாய்க்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Quercitain பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில்அவசர சேவை பிரிவினர் இரண்டு குழந்தைகளை மீட்டுள்ளனர். உயிர் காப்பு முதலுதவி செய்தும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது.
மயக்க நிலையிலிருந்த 35 வயது தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் வலென்சின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உடற்கூராய்விற்கு பிறகே மேற்படி விவரங்கள் தெரியவரும். இது குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.