காவல்துறை பயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்சில் பேரணி ! 

by Editor
0 comment

தடையை மீறி காவல்துறைக்கு எதிராக பிரான்சில் நூற்றுக்கணக்கானோர் பேரணி. இருவர் கைது

காவல்துறையினரின் வன்முறை போக்கிற்கு எதிராக இடது சாரி அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைத்த பேரணி இன்று பிரான்சின் பல நகரங்களில் நடைபெற்றது.

பிரான்சின் Val-d’Oise அருகே அதாமா துராவ்ரே எனும் இளைஞர் கடந்த ஜூலை 2016ஆம் ஆண்டு காவல்துறையினரின் பிடியிலிருந்தபோது மரணமடைந்தார். அவருடைய இறப்பின் ஏழாம் ஆண்டு நினைவாகவும், காவல்துறை வன்முறைகளை கண்டித்தும் அவருடைய சகோதரர் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த பேரணியினால் காவல்துறைக்கு எதிராக வன்முறை வெடிக்கலாம் என்று கூறி பிற்பகல் மூன்று மணியளவில் பாரிசில் நடைபெறவிருந்த இந்த பேரணிக்கு காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

மர்செய், ஸ்ட்ரஸ்பூர், லீல் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் தடையை மீறி பேரணி நடைபெற்றது.

இருப்பினும் தடையை மீறி நூற்றுக்கணக்கானோர் ரிபப்ளிக் எனுமிடத்தில் அதாமா துராவ்ரேக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், காவல்துறை வன்முறைக்கு எதிராகவும் கூடி பேரணி நடத்தினர்.

பேரணியில் பங்கேற்றவர்களிடம் அதாம துராவ்ரேவின் சகோதரர் அஸ்ஸ் துராவ்ரே பேசினார். வன்முறை ஏதுமின்றி கலைந்து செல்லுமாறு அவர்களிடம் கூறினார்.

பாரிசில் மட்டும் கிட்டத்தட்ட 2000 பேர் கூடியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை காவல்துறையினர் தாக்கியதாக ஊடகவியலாளர் கிளெமென் லனோ குற்றம் சாட்டினார்.

தடையை மீறி பேரணி நடத்தியதாக அஸ்ஸா துராவ்ரே கைது செய்யப்பட்டார். அவருக்கு சட்டத்தின் படி 7500 யூரோ அபராதமும் ஆறு மாதம் சிறைத்தண்டனையும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech