தகராறு முற்றியதில் நபரொருவர் நடுவீதியில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
பாவ் (Pau) (Pyrénées-Atlantiques) நகரில் 42 வயது மதிக்கத்தக்க ரஷிய நாட்டவர் ஒருவர் இறந்த நிலையில் வீதியின் நடுவே கிடந்துள்ளார். அவர் உடலில் நிறைய கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
இது குறித்து அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அவசர சிகிச்சை பிரிவினர் அவரை சோதித்து விட்டு அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
அவர் இறந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் அவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறையினர் விசாரணையில் சாலையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இன்னொரு ரஷிய நாட்டவர் அவரை குத்திக்கொலை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் வாக்குமூலம் பெற்றதோடு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவ் நகரில் கடந்த மூன்று மாதங்களில் இதுவரை மூன்று பேர் கத்திக்குத்து சம்பவங்களில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.