லிவ்ரி கர்கானில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சமையலறை சுவற்றில் அடையாளம் தெரியாத ஆணின் உடலை பெண்ணொருவர் கண்டெடுத்துள்ளார்.
ஊருக்கு சென்றிருந்த அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் ஆறு மாதத்திற்கு பிறகு திரும்ப வந்தபோது வீட்டில் சமையலறை சுவற்றில் புதைக்கப்பட்டிருந்த இறந்த உடலை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளானர்.
ஊருக்கு செல்லும்போது வீட்டில் சில பணிகளை மேற்கொள்ள கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவரிடம் வீட்டை ஒப்படைத்து சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் வீட்டு உரிமையாளருக்கு அந்நபரின் பெயரைத் தவிர வேறெதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
ஊரிலிருந்து திரும்பியதும் வீட்டின் சமையலறையில் புதிதாக சிறிய சுவர் கட்டப்பட்டிருந்ததை கண்டு சந்தேகமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர் சுவற்றை உடைத்து பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் ஆணின் உடல் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
இது பற்றி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.