திமிங்கலத்தின் உடலிலிருந்து ஐந்து இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள பொருள் மீட்பு

by Editor
0 comment

இறந்து கரையொதுங்கிய திமிங்கிலத்தின் உடலிலிருந்து ஐந்து இலட்சம் மதிப்புமிக்க அம்பர் கிரிஸ் எனும் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எண்ணெய்த் திமிங்கலம் என்றழைக்கப்படும் ஸ்பேர்ம் வேல் (Sperm Whale) வகைகளில் நூற்றில் ஒன்று மட்டுமே உருவாக்கக்கூடிய அரிய வகை பொருள் ‘அம்பர்கிரிஸ்’ என்றழைக்கப்படுகிறது. விலையுயர்ந்த பொருளான அம்பர்கிரிஸ் கிடைப்பதற்கு மிக அரியதாகும்.

லா பல்மாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் (University of Las Palmas de Gran Canaria) கானரி தீவுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் போது அந்த தீவில் இறந்து கரை ஒதுங்கியிருந்த திமிங்கிலத்தின் உடலிலிருந்து சுமார் 9.5 கிலோ எடை அம்பர்கிரிசை கண்டறிந்துள்ளனர்.

இதன் மதிப்பு 5,00,000 யூரோக்கள் என கூறப்படுகிறது.

பன்னாட்டு சந்தையில் ஒரு கிலோ அம்பர்கிரிசின் விலை 80 ஆயிரம் யூரோக்களாகும்.

href=”https://twitter.com/NuestroDiario/status/1677347991747796992?ref_src=twsrc%5Etfw”>July 7, 2023

அம்பர்கிரிசை விற்பதன் மூலம் வரும் பணம் எரிமலை வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அந்த தீவின் மீள்கட்டமைப்புக்கு பயன்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், திமிங்கிலத்தின் இறப்பு குறித்தும் ஆய்வும் செய்து வருகின்றனர்.

அம்பர்கிரிஸ் என்பது எண்ணெய்த் திமிங்கில வகைகளினால் செரிமான சிக்கலின்போது வாந்தியாக வெளியேற்றப்படக்கூடிய திடக்கழிவாகும். இது வாசனைத்திரவியம், யுனானி மருந்துகள் உள்ளிட்ட பல பொருட்களை தயாரிக்க பயனுள்ளதாக இருக்கிறது. எண்ணெய்த் திமிங்கிலம் தனது உடலிலிருந்து வெளியேற்றிய அம்பரிஸ் எனப்படும் இறுகிய வாந்தி கரையை அடைய பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகும்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech