193
இரு கார்கள் மோதிக்கொண்ட சாலை விபத்தில் ஏழு வயது குழந்தை ஒன்று படுகாயம் அடைந்தது.
Terdeghem எனுமிடத்தில் இரு கார்கள் மோதிக்கொண்டதில் ஒரு காரின் முன் பக்கம் தீப்பிடித்துக்கொண்டது. மேலும் அந்த காரில் இருந்த ஏழு வயது குழந்தையும் படுகாயம் அடைந்தது. உடனடியாக செயல்பட்ட அந்த குழந்தையின் தந்தை தீ பற்றிய காரில் இருந்து அந்த குழந்தையை மீட்டுள்ளார். அதோடு அந்த குழந்தை உடனடியாக லீலில் உள்ள மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.