Réville கடற்கரையில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஒருவர் நிறைய பைகளில் போதைப்பொருட்கள் கரை ஒதுங்கியிருப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர் நிறைய பைகளில் அடைக்கப்பட்டு இருந்த போதைப் பொருளை கைப்பற்றி பரிசோதனைக்காக பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அது கொக்கைன் எனும் போதைப்பொருள் என்று உறுதிப்படுத்தப்பட்டது.
கைப்பற்றப்பட்ட மொத்த போதைப் பொருட்களின் எடை கிட்டத்தட்ட ஒரு டன் ஆகும். இந்த பைகள் படகிலிருந்து கடலில் விழுந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மை காலங்களில் இது போன்ற கண்டெடுப்புகள் மிக சாதாரணமாகி வருகின்றது.