Deuil-la-Barre (Val-d’Oise) நகரில் CRS காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அவ்வளவு சகாக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட காவலர் மிகத் திறமையானவர் அன்பானவர் அனைவரிடமும் நடந்து கொள்பவர் அவர் இப்படி செய்வது அதிர்ச்சி அளிக்கிறது என்று அவருடைய நண்பர்களில் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது இது மூன்றாவது முறையாகும்.
ஜனவரி மாதத்தில் காவலர் ஒருவர் தன்னுடைய துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் வசிக்கும் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது தற்கொலை எண்ணங்கள் இருந்தால் உடனடியாக 3114 என்ற தேசிய தற்கொலை தடுப்பு எண்ணுக்கு அழைக்கவும். இது 24 மணி நேரமும் ஆண்டில் எல்லா நாட்களும் பணிபுரியும். ஒரு வல்லுனர் உங்களுக்கு உதவி செய்வார்.