Pantin நகரில் நடைபெற்ற காவல் தேடுதல் நடவடிக்கையில் 14 கிலோ கஞ்சா பிசின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரெஞ்சு காவல்துறையின் புலனாய்வு பிரிவும் குற்ற தடுப்பு பிரிவும் இணைந்து காவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை கைது செய்தனர். அவருடைய வீட்டை சோதனையிட்டபோது கிட்டத்தட்ட 14 கிலோ கஞ்சா போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டில் இருந்த இன்னொருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். செவ்ரானில் உள்ள இன்னொரு வீட்டை சோதனையிட்டதில் போலி பாஸ்போர்ட்டுகள், அடையாள அட்டைகள், கள்ள நோட்டுகள் போன்றவற்றை கைப்பற்றினர்.
குற்ற வழக்குகள் தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த வாரம் Stains நகரில் 700 கிலோ கஞ்சாவும், Montreuil-இல் 65 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.