இலவசமாக வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு விலக்கு

by Editor
0 comment

பாரிஸ் நகருக்குள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

இலவசமாக வாகனங்களை நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டவர்கள், பாரிஸ் நகருக்குள் தங்கள் வாகனங்களை நிறுத்தும்போது முகப்பு கண்ணாடியில் ‘இலவச வாகன நிறுத்த அட்டையை’ பார்வைக்கு கண்டிப்பாக வைக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், சுகாதார துறையை சார்ந்தவர்கள், மின் வாகன ஓட்டிகளுக்கு இது கடினமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

இது குறித்து பாரிஸ் நகர மன்றத்தில் விவாதித்த பிரதிநிதிகள், புதிய திருத்தங்களை கொண்டு வர சம்மதித்து வாக்களித்தனர்.

இதனடிப்படையில், நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் வாகன நிறுத்தத்திற்கு ஏற்கனவே இலவசமாக அனுமதிக்கப்பட்டவர்கள் இனி ‘இலவச அனுமதி அட்டையை’ காரின் முகப்பில் வைக்கத் தேவையில்லை என்றும், கல்வியாண்டு துவங்கும் நாளிலிருந்து இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech