பாரிசில் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள்

by Editor
0 comment

பாரிசில் அதிகரிக்கும் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் முதன்முறையாக கொசு மருந்து தெளிக்கும் பணிகள் இன்று முதல் துவங்கப்பட உள்ளன.

‘டைகர்’ இன கொசுக்கள் குழுமியுள்ள பகுதிகளில் 150 மீட்டர் சுற்றளவில் கொசு மருந்துகள் தெளிக்கப்பட உள்ளன.

கொசுத்தொல்லையை ஒழிக்கும் பெரியளவிலான நடவடிக்கைகள் பாரிசின் இன்றிரவு முதல் மேற்கொள்ளப்படும் என பிரான்சு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்ல் காரணமாக பிரான்சின் தலைநகரான பாரிசில் முதன்முறையாக கொசு ஒழிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பாரிசின் 13வது மாவட்டத்தில் இன்றிரவு கொசு மருந்து தெளிக்கும் பணிகள் துவங்கப்பட்டும் என்று தெரிகிறது.

மருந்து தெளிக்கப்படும் போது அருகில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு ஜன்னல்களை மூடிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டமாக, நாளை மாலை கொலோம்ப் (Colombes) நகரில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இல் தே பிரான்ஸ் மாநிலத்தில் இந்த ஆண்டில் மட்டும் ஆறு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட உள்ளன என்று பிரான்சின் சுகாதார நிறுவனம் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது.

டெங்கு, சிக்கன்குனியா மற்றும் சிகா ஆகிய நோய்களை பரப்பும் ‘டைகர்’ (Aedes albopictus) இன கொசுக்கள் முதன் முறையாக பிரான்சில் 2004-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.

டைகர் கொசுக்கள் அதிலிருந்து தொடர்ந்து பரவி பெருகி வந்த நிலையில், 2006-ஆம் ஆண்டு முதல் அவை கண்காணிக்கப்பட்டு வந்தன.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech