வணிக வளாகத்தில் உள்ள செல்போன் கடையில் ஊழியர்களை மிரட்டி 200-க்கும் மேற்பட்ட செல்போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ரொனி சுபுவாவில் (Rosny-sous-Bois) உள்ள வணிக வளாகம் காலை திறக்கப்பட்டது உள்ளே நுழைந்த மூகமூடியணிந்த நான்கு பேர் கும்பல், அங்கிருந்த செல்போன் கடையில் புகுந்து செல்போன்களை கொள்ளையடித்துள்ளது.
வழக்கம்போல் கடைக்கு வந்த ஊழியர்கள் கடையில் உள்ள செல்போன்கள் திருடப்படுவதை கண்டுள்ளனர்.
ஊழியர்களை கண்ட கும்பல், கண்ணீர் புகை குண்டு குப்பிகளை காட்டி அவர்களை மிரட்டி கடைக்குள் கொண்டு சென்றது.
மேலும், கடையின் பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து அதிலிருந்த 200 செல்போன்களை திருடியுள்ளனர்.
தப்பிச்செல்லும்போது மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
வணிக வளாகத்தில் அவசர வழியாக வெளியேறிய கும்பல் தயாராக இருந்த காரில் தப்பிச்சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.