உலக பொருளாதாரம் மந்தமாக இருப்பினும் பங்குசந்தையில் முதலீடு செய்திருந்த பிரான்ஸ் நாட்டவர்கள் 46 பில்லியன் யூரோக்களை ஈவுத்தொகையாக (Dividends) பெற்றுள்ளனர்.
பெரும் நிறுவனங்கள் தங்கள் நிறுவன பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு இரண்டாம் காலாண்டு ஈவுத்தொகையாக சுமார் 560 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளன.
கடந்த 2022-ஆம் ஆண்டை காட்டிலும் 4.9% அதிகம் என கூறப்படுகிறாது.
ஐரோப்பாவை பொறுத்தமட்டில் ஈவுத்தொகை வழங்குவது இந்த காலாண்டில் 9.7% உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டு முதலீட்டாளர்கள் 30% ஈவுத்தொகையினை பெற்றுள்ளனர்.
பி என் பி பரிபாஸ், சனோபி, அக்சா போன்ற நிறுவனங்கள் பிரான்சிலுள்ள தங்கள் முதலீட்டாளர்களுக்கு சுமார் 46 பில்லியன் யூரோக்களை ஈவுத்தொகையாக பெற்றுள்ளனர், இதுவொரு சாதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 142 பில்லியன் யூரோக்கள் அளவிற்கு லாபத்தை ஈட்டியுள்ளன.
உலகம் முழுமைக்கும் ஈவுத்தொகைகள் அதிகரித்திருப்பதற்கு வங்கி சார்ந்த நிறுவனங்களே முதன்மை காரணிகளாக விளங்குகின்றன.
ஆட்டோமொபைல் துறை அதற்கடுத்த இடத்தில் உள்ளது.