வீட்டின் ஜன்னலை உடைத்து 1.6 லட்சம் யூரோக்கள் மதிப்புள்ள நகைகளை திருடிய இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Neuilly-sur-Seine அருகே அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலை உடைத்த இருவர், உள்ளே நுழைந்து விலையுயர்ந்த பொருட்களை திருடியுள்ளனர்.
வீட்டிற்குள் சந்தேகத்திற்கிடமான வகையில் சத்தம் ஏற்படுவதை கேட்ட காவலாளி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
குற்றத்தடுப்பு பிரிவினர் (BAC) சம்பவ இடத்திற்கு வந்தபோது, இரண்டு பேர் வீட்டிலிருந்த நகைகள், தோலிலான பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடி இரண்டு பெரிய பெட்டிகளில் வைத்து வெளியே தூக்கி வந்துள்ளனர்.
அவர்களை கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
விசாரணையில், திருடர்கள் ஒருவர் 18 வயது நிரம்பாதவர் என்று தெரிய வந்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டில் இருந்த பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் திருடிய பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் யூரோக்கள் என்று கூறப்படுகிறது.
இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சம் ஆகும்.
அவர்களின் கைப்பேசியை சோதித்த காவல்துறையினர் அவர்கள் பல்வேறு திருடர்களுடன் தொடர்பில் இருப்பதையும், இதேபோன்று திருடும் பல்வேறு கொள்ளை குழுக்களுடன் கூட்டாக பழகி வந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.