95 வயது பெண்மணியொருவர் Clichy (Hauts-de-Seine)-யில் உள்ள அவரது வீட்டில் நபரொருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று வீட்டிற்குள் நுழைந்த அந்நபர், மூதாட்டியை தாக்கியதோடு திருடவும் முயன்றுள்ளார்.
நீண்ட நேரம் அவ்வீட்டில் இருந்த அந்த நபர், மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மூதாட்டி வசித்த அதே கட்டிடத்தில் வசித்து வந்தவர்.
இது குறித்து வேறொரு பெண்மணி அந்நபர் ஏற்கனவே அவருடைய 14 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளார் என்று கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டு விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.