பிரான்சின் நிதித்துறை இயக்கக பெயரை பயன்படுத்தி கார்களை வாங்கி மோசடி செய்ய முயன்ற இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் DGFIP எனப்படும் அரசுத்துறையின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்தி கார்களை வாங்க முயன்றுள்ளனர்.
முன்னதாக, கார் விற்பனையாளரிடம் பிரான்சின் நிதித்துறைக்கு கார்கள் வாங்குவதாக கூறி கார்களை வாங்கியுள்ளனர்.
இதனையடுத்து கார் விற்பனையாளர் கார்களை Noisy-le-Grand (Seine-Saint-Denis)-இல் உள்ள குறிப்பிட்ட அரசு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மோசடி நபர்கள் அந்த கார்களை பெற்றுக்கொள்ள வரித்துறை அதிகாரிகள் போல் வேடமிட்டு சென்றுள்ளனர்.
ஆனால், அரசு அலுவலகத்தில் உள்ளவர்கள் அவர்களை போலி அரசு அதிகார்கள் என்பதை கண்டுபிடித்துள்ளனர். உடனே அவர்களை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அங்கு விரைந்த காவல்துறையினர் போலி அரசு அதிகாரிகள் போன்று வேடமிட்டு மோசடி செய்த நபர்களை கைது செய்துள்ளனர்.
இது அவர்களுடைய முதல் முயற்சி அல்ல என்றும், ஏற்கனவே ஆறு வாகனங்கள் இதே போல் ஏமாற்றப்பட்டு திருடப்பட்டுள்ளன என்றும், இதுவரை இவர்களால் 2 இலட்சம் முதல் இரண்டரை இலட்சம் யூரோக்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து Noisy-le-Grand காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.