Melun: கத்தியால் குத்தி கொல்ல முயன்ற தமிழருக்கு 15 ஆண்டுகள் சிறை

by Editor
0 comment

தன்னுடன் உறவில் இருந்த பெண்ணின் மகளை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற இலங்கைத் தமிழருக்கு மெலுன் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது

குற்றம் சாட்டப்பட்டுள்ள லெஸ்லி மிசேல் திருச்செல்வம் என்ற நபர் 2011 ஆம் ஆண்டு புகலிடம் தேடி பிரான்சுக்கு வந்துள்ளார். பிரான்சில் புகலிடம் மறுக்கப்பட்ட நிலையில், 2013 ஆம் ஆண்டு Choisy-le-Roi-வில் ஒரு பேரங்காடியில் வேலை செய்யும் போது அங்கு உடன் பணியாற்றிய பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இப்பழக்கம் காதலாக மாறி குடும்ப சூழ்நிலை காரணமாக ரகசிய உறவாக தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் அப்பெண்ணின் 19 வயது மகள் இவ்விடயத்தை உறவினர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்,  சம்பவத்தன்று குடிபோதையில் கத்தியுடன் சென்ற அந்த நபர் அப்பெண்ணின் மகளை 16 முதல் 19 முறை கத்தியால் குத்தியுள்ளார்.

Rue des Pêcheurs (Vaires- sur-Marne ) எனுமிடத்தில் ஜூலை மாதம் 2020 ஆம் ஆண்டு இச்சம்பவம்  நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்டவரை கொல்லும் நோக்கில் தான் கத்தியால் குத்தவில்லை என்று நீதிமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார். 

இருப்பினும் நீதிமன்றம் அவர் கொலை முயற்சியில்  ஈடுபட்டதாக கூறி அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

அதோடு பிரான்சின் எல்லைக்குள் வரவும் நிரந்தர தடை விதித்துள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech