அமியன் அருகே பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த குற்றத்தடுப்பு பிரிவு காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரெஞ்சு காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவு காவலர் ஒருவர் முகமூடி அணிந்துக்கொண்டு Carrefour Market பேரங்காடிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார். பின் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.
இதனைக்கண்ட பெண் ஒருவர் அவரை பின் தொடர்ந்ததோடு காவல்துறையினருக்கும் தகவல் அளித்தார்.
அதோடு, கொள்ளையடித்தவரை மடக்கி பணத்தை திருப்பியளிக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், பதிலுக்கு அப்பெண்ணை துப்பாக்கி காட்டி அங்கிருந்து செல்லும்படி மிரட்டியுள்ளார்.
அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய நபரை அவருடைய வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
அவருடைய வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதே போல் அப்பகுதியில் நடைபெற்ற பல கொள்ளைச்சம்பவங்களிலும் இவர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.