பிரான்சில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரிப்பு

by Editor
0 comment

பிரான்சில், குறிப்பாக இல் தே பிரான்ஸ் மாநிலத்தில் குழந்தைகள் அதிகளவு இறப்பதாக புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இல் தே பிரான்சில் பிறக்கும் குழந்தைகளில் ஆயிரத்தில் நான்கு குழந்தைகள் தங்களுடைய முதல் பிறந்த நாளுக்கு முன்னரே இறந்துவிடுகின்றன.

இது கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அதிகரித்துள்ளது.

2000 – 2012 ஆம் ஆண்டுகளுக்கிடையேஹ் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் ஒரு வயதுக்கு முன்னரே இறந்துள்ளனர்.

அவர்களில் பாதி பேர் பிறந்த ஒரே வாரத்தில் இறந்துள்ளனர்.

குழந்தைகள் இறப்பு விகிதம் பிரான்ஸ் முழுவதும், குறிப்பாக இல் தே பிரான்ஸ் மாநிலத்தில் உயர்ந்துள்ளதாக மாநில சுகாதார கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களின் வயது அதிகரித்தல், நீரிழிவு நோய், பாதுகாப்பின்மை போன்றவை குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

கடந்த பத்தாண்டுகளாகவே குழந்தைகள் இறப்பு விகிதம் பிரான்சில், குறிப்பாக இல் தே பிரான்ஸ் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது.

நாடு முழுமைக்கும் இந்த விகிதம் உயர்ந்திருந்தாலும், இல் தே பிரான்ஸ் மாநிலத்தில் அதிகமாக உள்ளதாக தேசிய சுகாதார கண்காணிப்பகம் (ORS) தெரிவித்துள்ளது

IMR எனப்படும் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 3.95 குழந்தைகள் எனும் விகிதத்தில் கடந்த 19 ஆண்டுகளாக உள்ளது.

இது தேசிய அளவில் 3.63 ஆக உள்ளது.

சேன் சாந்தெனி (Seine-saint-Denis) மாவட்டத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு ஐந்து என அதிகளவில் உள்ளது.

சேன் சாந்தெனி அருகிலுள்ள மற்ற மாவட்டங்களான Hauts-de-Seine, Seine-et-Marne ஆகியவற்றில் அதிகரிக்கவில்லை.

2000 – 2020 ஆண்டுகளுக்கிடையே ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சுமார் 13,400 பேர் இறந்துள்ளனர். 

அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (47.8%) பிறந்த முதல் வாரத்திலேயே இறந்துள்ளனர்.

Neonatal mortality என்று அழைக்கப்படும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம்  ஒவ்வொரு ஆண்டும் 2.52% உயர்கிறது.

பிறந்த 0-6 நாட்களுக்குள் மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இல் தே பிரான்ஸ் மாநிலத்தில் அதிகமாக உள்ளதாக மாநில சுகாதார கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஏழு முதல் 24 நாட்களுக்குள் இருக்கும் குழந்தைகளின் விகிதமும் சிறிது அதிகமாக இருப்பினும் குறிப்பிடத் தகுந்த அளவு உயரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech