காவல் நிலையம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மீது ஆயுதம் வைத்திருந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
மர்சேயில் கடந்த வியாழன் அதிகாலை ஒரு மணியளவில் காவல் நிலைய வாயிலில் பணியில் இருந்த காவலர் ஒருவர கத்தி வைத்திருந்த நபரொருவர் கடுமையாக தாக்கியுள்ளார்.
விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிய் வந்துள்ளது.
காயமடைந்த காவலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று அந்நபர் காவல் நிலையத்தை நோக்கி வந்துள்ளார். வாயிலில் பணியில் இருந்த காவலர் அவரை தடுத்து நிறுத்திய போதும் கேட்காமல் அன்னவர் உள்ளே நுழைய முயன்றுள்ளார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காவலர் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து அவரை தடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் அந்த நபர் காவலரின் தலையில் கற்களால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
அதற்குள் மற்ற காவலர்கள் ஓடி வந்து காவலர் மீட்டு நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தாக்கிய நபர் மனநிலை செயலாக என்றும் மனநிலை சிகிச்சையில் இருக்கிறார் என்றும் காவல் நிலைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட நபர் மீது ஏற்கனவே 20 வழக்குகள் உள்ளன என்று காவல் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அவரை தாக்கியவர் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.