பிரான்சின் மர்சேயிலுள்ள லா பதெர்னெல் நகரில் நேற்றிரவு நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறில் அந்நபர் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
கொலையாளி 9 மி.மீ கைத்துப்பாக்கியால் அந்நபரை பல முறை சுட்டுள்ளார்.
கொல்லப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்வதற்காக கொலையாளி இருவரை துப்பாக்கி முனையில் வண்டியை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக கொலையாளிக்கு உதவியாக இருந்ததாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் இதே நகரத்தில் 34 வயது நபரொருவர் போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.