பணிக்கு குடிபோதையில் வந்த விமானி கைது !

by Editor
0 comment

யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானி ஒருவர் பணிக்கு குடிபோதையில் வந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

267 பயணிகளுடன் பிரான்சிலிருந்து அமெரிக்கா செல்லவிருந்த யுனைடட் ஏர்லைன்ஸ் போயிங் விமானத்தின் கேப்டனான ஹென்றி என்பவர், பணிக்கு குடிபோதையில் வந்தது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 63 வயதான விமானிக்கு இன்று ஆறு மாத சிறைத்தண்டனையும், 4500 யூரோக்கள் தண்டமும், ஓராண்டு விமானம் ஓட்டவியலாத பணியிடை நீக்கமும் விதிக்கப்பட்டுள்ளது.

‘அவரைப் பார்த்தபோதே அவர் கடும் போதையிலிருந்து நன்கு தெரிந்தது. அவரால் சரியாக பேச முடியவில்லை. பரிசோதனையில் அவர் இரத்தத்தில் ஒரு லிட்டருக்கு 1.32 கி. ஆல்கஹால் இருந்தது தெரிய வந்தது. ஒரு லிட்டர் இரத்தத்தில் 0.2 ஆல்கஹால் இருப்பது தான் விமானிகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவு’ என விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரான்சின் ருவாசி விமான நிலையத்தில் விமானி குடிபோதையில் கைது செய்யப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech