குற்றத்தடுப்பு காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு

by Editor
0 comment

கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய சென்ற காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பினை ஏற்படுத்துள்ளது.

மர்சேயிலுள்ள Belle-de-Mai மாவட்டத்தில் கடத்தலுக்கான பணப் பரிமாற்றம் நடக்கும் இடத்திற்கு குற்றவாளிகளை கைது செய்ய சென்ற குற்றத்தடுப்பு பிரிவு (BAC) காவல்துறையினர் மீது கடத்தல்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

நல்வாய்ப்பாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

துப்பாக்கி சூடு பற்றி தகவலறிந்த காவல்துறையினர் அங்கு உடனடியாக விரைந்தனர்.

பாதுகாப்பிற்காக மேலும் காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech