Europa-park எனும் பொழுதுபோக்கு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அலங்கார மேடை சரிந்ததால் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
பிரான்சு- ஜெர்மனி எல்லைக்கருகில், ஜெர்மனியின் ருஸ்த் நகரில் (Rust) அமைந்துள்ள ஈரோப்பா-பார்க் (Europa-Park) கேளிக்கை பூங்காவில் ‘Retorno dos Piratas’ எனும் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இந்நிகழ்ச்சியை பல பார்வையாளர்கள் கண்டு இரசித்துக்கொண்டிருந்தனர்.
காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே திடீரென்று அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடை சரிந்து நீருக்குள் விழுந்தது.
இதில் அம்மேடையில் நடித்துக்கொண்டிருந்த நடிகர்களும், இரண்டு பார்வையாளர்களும் காயமடைந்தனர்.
Nouvel Accident à europapark !
— Piberius (@NickPbWilde) August 14, 2023
Une scène c’est effondrée en plein spectacle sur l’attraction. Plusieurs blessés serait à d’éploré malheureusement 😨
🎥 : Facebook Reshma Fadarkhan pic.twitter.com/rDy9qDj8kg
காயமடைந்தவர்களில் மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
நகரும் மேடையின் அடித்தளத்தில் நீர் கசிவு ஏற்பட்டதால் அமைப்பு சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளாதாகவும், விரைவில் சரி செய்யப்பட்டு மீண்டும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அந்த கேளிக்கை பூங்கா தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் இதே கேளிக்கை பூங்காவில் தொழில்நுட்ப கோளாறின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதும், இதனால் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.